பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கெலமங்கலம் போலிசாரின் முயற்சி

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கெலமங்கலம் போலிசாரின் முயற்சி

ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சானிடைசர் இயந்திரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ள காவல்நிலையத்திற்கு தினந்தோறும் அதிகஅளவிலான கிராம பகுதி பொதுமக்கள் வந்து செல்வதால்

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி அடிக்கடி கை கழுவும் வகையில் கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் அவர்களின் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்களின் வழிகாட்டுதல்படி கெலமங்கலம் காவல்நிலையத்தில் தானியங்கி சானிடைசர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது

எஸ்ஐ பார்த்திபன் அவர்களின் முன் முயற்சியால் பொருத்தப்பட்டுள்ள சானிடைசர் இயந்திரம் கைகளை நீட்டினாலே கிருமிநாசினி தெளிக்கும் வகையில் உள்ளது, காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கை கழுவுவதால் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் இன்று கெலமங்கலம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு காவல்துறை சார்பில் முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் இலவசமாக வழங்கப்பட்டன. போலிசாரின் புதிய முயற்சி அனைவரையும் வெகுவாக கவரும்படி உள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்