கீர்த்தி சுரேஷ் புதிய படத்துக்கு டைட்டில் ரெடி

  • In Cinema
  • August 8, 2019
  • 302 Views
கீர்த்தி சுரேஷ் புதிய படத்துக்கு டைட்டில் ரெடி

சென்னை:
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி மார்க்கெட்டை பிடித்துள்ளார். அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்திருந்தது.

ஆனால், கடந்த வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு பின்னர் வேறு எந்த படங்களும் அவருக்கு வரவில்லை. அவர் தற்போது மலையாளம் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் படத்தில் நடிக்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மிஸ் இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்