உதயநிதி வருகைக்கு பிறகு முன்னாள் தலைவர் கலைஞரை மறந்த திமுகவினர்? உதயநிதி ஆற்றிய சேவைகள் என்ன என கேள்வி

உதயநிதி வருகைக்கு பிறகு முன்னாள் தலைவர் கலைஞரை மறந்த திமுகவினர்? உதயநிதி ஆற்றிய சேவைகள் என்ன என கேள்வி

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரை நூற்றாண்டு காலம் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி, தான் போட்டியிட்ட தேர்தலில் இதுவரை தோற்றதே இல்லை என்கிற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர்,12 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கலைஞர் தான் இறந்தபோது சொந்த தொகுதியான திருவாரூர் எம்எல்ஏவாகவே இருந்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.

கலைஞர் மு.கருணாநிதி வரலாற்றுச் சாதனையாளர்
திராவிட இயக்கமானது, இடஒதுக்கீடு கொள்கை, பெண் சமத்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட உயர் நெறிகளை நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றி, டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற பல பெரும் தலைவர்களை உருவாக்கியது.

அப்பேற்பட்ட தலைவரை தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள், ஆனால் கலைஞரை திமுகவினரே மறந்துவிட்டார்களோ என்கிற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் மகனான உதயநிதி சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வந்தார் கலைஞரின் மறைவிற்கு பிறகு நேரடியாக திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார், மூத்த திமுக நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என்றாலும் தலைவரின் மகன் என்பதற்காக ஏற்றுக்கொண்டனர்.

உதயநிதி வருகைக்கு பின்பு அனைத்து போஸ்டர்களிலும், நிகழ்ச்சிக்களிலும் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக கலைஞரின் புகைப்படத்தை விட பெரியதாக உதயநிதியின் இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளான திமுகவின் 4 எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து ஒசூர், வேப்பனஹள்ளி, தளி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதி எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட பதாகைகளில் திமுக தலைவர், இளைஞரணி செயலாளர் படத்தை விட 10 மடங்கு சிறிய அளவில் கடமைக்கு கலைஞரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. இதற்கு முன்பாக இளைஞரணி செயலாளராக இருந்தவரின் புகைப்படத்தை பயன்படுத்தவே இல்லை என்றாலும் கலைஞரின் புகைப்படத்தை விட பெரிய அளவில் உதயநிதி படம் இடம் பிடிக்க அவர் ஆற்றிய சேவைகள் தான் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது?

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்