காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம்; சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றம்

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம்; சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீர்:

தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமர்நாத் யாத்ரீகர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு காஷ்மீர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால் கூடுதல் விமானங்களை இயக்க விமான போக்குவரத்து இயக்குநகரகம் கேட்டுக்கொண்டுள்ளது. தனியார் விமான நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் பீதியடைய வைத்துள்ளது. இதனால், வீட்டுக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பதற்காக கடைகளில் நீண்ட வரிச¬யில் நின்று வாங்கிச்செல்கின்றனர். ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் பங்க்குள் மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்போவதாக செய்திகள் பரவியதையடுத்து, இந்த பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து ஆளுநர் தெரிவிக்க¬யில், அரசியலமைப்பு சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதால் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டதை தொடர்புபடுத்தி தேவையற்ற பீதியை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்