காஷ்மீர் பிரச்சனை.. பிரதமர் மோடி 8 மணிக்கு உரை

காஷ்மீர் பிரச்சனை.. பிரதமர் மோடி 8 மணிக்கு உரை

டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி இன்று இரவு 8 மணிக்கு மோடி விளக்கமளிக்கிறார்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் மேலும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை கூடியது.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரோ ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து டிவி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடுகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்