370 நீக்கம் காஷ்மீரின் வளர்ச்சி

370 நீக்கம் காஷ்மீரின் வளர்ச்சி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது மக்களின் வளர்ச்சிக்கானது என அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் சுதந்திர தினவிழாவில் உரையாற்றியுள்ளார்.

நாட்டின் 73வது சுதந்திர தினவிழாவையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் கவர்னர் சத்யபால் மாலிக், தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

அப்போது உரையாற்றிய கவர்னர் சத்யபால் மாலிக், மத்திய அரசு சட்டப்பிரிவு 370 சட்டப்பிரிவு நீக்கம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதமான பிராந்தியங்களின் அடையாளங்கள் வளர வழிவகுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்