‘‘சட்டப்படி முடிவு எடுக்கப்படும்’’ – கர்நாடக சபாநாயகர்

‘‘சட்டப்படி முடிவு எடுக்கப்படும்’’ – கர்நாடக சபாநாயகர்

பெங்களூரு:

கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரின் ராஜினாமா குறித்து சட்டப்படி முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, ராஜினாமா எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று கர்நாடக சபாநாயகரை சந்தித்தனர்.

பின்னர் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவிக்கையில், ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில் 8 பேரின் ராஜினாமா முறையாக அளிக்கப்படவில்லை. அவர்களிடம் நேரில் முறையாக ராஜினாமா கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்கள் ராஜினாமா கொடுக்கும்போது, நான் வெளியில் வேறு வேலையாக இருந்தேன். மேலும் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன என தெரிவித்தார்.

ராஜினாமா கடிதம் மீது வேகமாக முடிவெடுக்க என்னாள் முடியாது எனவும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது; சட்டப்படியே முடிவு எடுக்கப்படும். இந்த நாட்டையும், அரசியலமைப்பையும் மதிப்பவன்.

இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா அல்லது தாமாக முடிவெடுத்ததா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன். ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்