கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு

கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு

பெங்களூரு:

நீண்ட நாள் இடைவெளிக்குப்பிறகு, கர்நாடக அமைச்சர்களாக 17 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

கர்நாடகத்தில் மஜத காங்கிரஸ் கூட்டணியின் முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து, பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இன்று 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

ஸ்ரீகோவிந்த மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா சவதி, ஈஸ்வரப்பா, அசோகா, ஜகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ்குமார், சோமன்னா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்பை, கோட்டா ஸ்ரீவாஸ் பூஜாரி, மதுஸ்வாமி, சந்திரகாந்த கவுடா, நாகேஷ், பிரபு சவுகான், ஜோலி சசிகலா அன்னா சாகேப் ஆகிய 17 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்