இ – பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!

இ – பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!

கர்நாடகாவிற்குள் நுழைய சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை, அதேபோல் வீட்டு தனிமையில் இருக்க தேவையில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுக்க கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் தென் மாநிலங்களில் இ – பாஸ் விதிமுறைகள் வேகமாக நீக்கப்பட்டு வருகிறது. நேற்று புதுச்சேரியில் இ பாஸ் நீக்கப்பட்டது.

தமிழகத்திலும் இ பாஸ் முறையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. முற்றிலுமாக இ – பாஸ் முறை நீக்கம் தொடர்பாக இன்று முதல்வர் பழனிச்சாமி உடன் வல்லுனர்கள் ஆலோசனை செய்தனர்

விதிகள் தளர்வு
இந்த நிலையில் கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கப்பட்டுள்ளது. கர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை. மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கப்பட்டுள்ளது.

எதுவும் இல்லை

ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது. தெர்மல் சோதனை கூட இனி எல்லையில் செய்யப்படமாட்டாது. கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.

ஸ்டிக்கர்

வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத நபர்கள் தனிமைப்படுத்த தேவை. அறிகுறி இல்லாத நபர்கள், வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் கர்நாடகாவில் தங்கள் பணிகளை தொடங்கலாம். தனிமைப்படுத்தாமல் தங்கள் பணிகளை தொடங்கலாம்.

அறிகுறி இல்லையென்றால்

அறிகுறி உள்ளவர்கள், தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெறலாம். அறிகுறி தீவிரம் அடைந்தால் கொரோனா சோதனைகளை மேற்கொள்ளலாம். அனைத்து மாநில மக்களுக்கும் இது பொருந்தும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்