நாளை அமைச்சரவை விரிவாக்கம்

நாளை அமைச்சரவை விரிவாக்கம்

பெங்களூரு:

பா.ஜ., தலைவர் அமித்ஷா அனுமதியளித்தையடுத்து, எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். கடந்த 20 நாட்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யாத நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்திற்கு எடியூரப்பா ஆளானார்.

பா.ஜ.,வில் யாருக்கெல்லாம் அமைச்சரவையில் இடமளிப்பது குறித்து இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பா.ஜ., மேலிடம் அனுமதி அளிப்பதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் இந்த கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமித்ஷா சந்தித்து அமைச்சரவை விரிவாகத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதாகவும், அதன்படி நாளை அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற முடியும் என்ற நிலையில், முதல்கட்டமாக 13 பேர் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்