பப்ஜி விளையாட்டை நிறுத்திய அப்பாவை கொன்ற மகன்

பப்ஜி விளையாட்டை நிறுத்திய அப்பாவை கொன்ற மகன்

பெலகாவி:

பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை தலையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் காகதி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா கும்பார் 60, இவரது மகன் ரகுவீர் 21, டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

எப்போதும் ரகுவீர் பப்ஜி விளையாடி கொண்டே இருந்துள்ளார். இதனை தந்தை சங்கரப்பா கண்டித்துள்ளார்.

இதில் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்கு அப்பாவிடம் ரகு பணம் கேட்டுள்ளார்.

ஆனால் சங்கரப்பா பணம் தரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரகு தன்னுடைய அப்பாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
மேலும், தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

இது பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ரகுவீர் நடந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்