கர்நாடக அமைச்சர் பட்டியல்.. அமித்ஷா இன்று முடிவு

கர்நாடக அமைச்சர் பட்டியல்.. அமித்ஷா இன்று முடிவு

டெல்லி:
பாஜக மேலிட உத்தரவுப்படி முதலமைச்சர் எடியூரப்பா டெல்லியில் நேற்று சந்தித்து அமைச்சர் பதவியை யார், யாருக்கு வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, கடந்த ஜுலை 26ம் தேதி எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

இன்றோடு 23 நாட்கள் முடிகின்றது. முதலமைச்சர் எடியூரப்பா மட்டும் தன்னந்தனியாக நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.

கர்நாடகாவில் சுமார் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. நிலைமையை சமாளிக்க அமைச்சர்களும் இல்லை.

இதனால் நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

எடியூரப்பா அமைச்சரவையின் உத்தேச பட்டியலை பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று கருதப்படுகிறது. அமைச்சர்கள் யார் என்று கர்நாடக பாஜ எம்.எல்.ஏக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்