கொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார்

கொரோனா; கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார்

டொரோன்டா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமர் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ குமணடைந்தார் என ஒட்டாவா பொது சுகாதாரத்துறை அறிவித்தது. பிரதமரின் மனைவி நேற்று(மார்ச்-28) சமூக ஊடகத்தில், “இப்போது நான் நன்றாக உணர்கிறேன். கொரோனா சிகிச்சை பெறுவோறுக்கு தனது அன்பை தெரிவிப்பதாக” கூறினார்.கனடாவில், கொரோனாவால் 5,655 பேர் பாதிப்படைந்துள்ளனர். 60 உயிரிழந்துள்ளனர். 508 பேர் குணமடைந்துள்ளனர். சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய பிறகு, சோபி கிரகோயர் ட்ரூடோ உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12ல் அவருக்கு கொரோனா இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது குழந்தைகள் மூவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

இவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவில்லை.பிரதமர் மனைவி சமூக ஊடகத்தில் கூறியதாவது: “இப்போது எனது உடல்நலம் நன்றாக இருப்பதை உணர்கிறேன். என் இதயத்தின் அடியிலிருந்து கூறுகிறேன். நல்மனதுடன் எனது நலத்தை விரும்பிய அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து முன்மாதிரியாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.₹

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்