ரஜினிகாந்த் ஒரு காமதுறை என களாய்த்த திமுக எம்பி

ரஜினிகாந்த் ஒரு காமதுறை என களாய்த்த திமுக எம்பி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து இயங்கிவருகின்றனர். மக்கள் நலப்பணிகள் செய்வது, சமூக வலைதளங்களில் பதிவிடுவது என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் காமராஜ் + அண்ணாதுரை = ரஜினிகாந்த். தமிழ்நாட்டு மக்கள் விரைவில் இதற்கு சாட்சியாக இருப்பார்கள் என ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார், ”எப்படி பார்த்தாலும் காமதுறைனு தான் வருது., எப்படி வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கைகள் செய்தாலும் நீங்க சொன்ன பேரு வரவில்லை, ஒரே குழப்பம் என்று பதில் அளித்து கலாய்த்திருந்தார்.பொதுவாகவே திமுக எம்.பி செந்தில்குமார் பாமக, உள்ளிட்ட கட்சிகளை தனது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அவர் ரஜினியை காமதுறை என்று குறிப்பிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்