ஆஸ்கர் விருதுக்கு தமிழ் சிறுமியின் குறும்படம்..!

  • In Cinema
  • May 13, 2019
  • 208 Views
ஆஸ்கர் விருதுக்கு தமிழ் சிறுமியின் குறும்படம்..!

சென்னை:

2020ம் ஆண்டின் ஆஸ்கர் விருதின், பரிந்துரை பட்டியலில் கமலி என்ற தமிழ் சிறுமியின் குறும்படம் இடம்பிடித்துள்ளது.

மகாபலிபுரத்தை சேர்ந்தவர் கமலி என்ற 9 வயது சிறுமி. இவர் ஸ்கேட்டிங் அசத்துபவர் ஆவார். காலணிகள் கூட இல்லாமல் அந்த சிறுமி ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்திய விதத்தை பார்த்த தோனி அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிலையில், நியூஸ்லாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ, அந்த சிறுமியை வைத்து, ‘கமலி’ என்ற 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.

இந்த குறும்படம், அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருதினை பெற்றது. மேலும், மும்பை குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுத்தந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது 2020க்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்