“கோட்சே குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’’ -கமல்ஹாசன்

“கோட்சே குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’’ -கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம்:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறிய கோட்சே குறித்த நிலைபாட்டில் மாற்றம் இல்லை என திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்துவரும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன். கோட்சே குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம் என சர்ச்சை பேச்சுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்