‘கோமாளி’ ரஜினி காமெடி; கமல் வருத்தம்

  • In Cinema
  • August 5, 2019
  • 248 Views
‘கோமாளி’ ரஜினி காமெடி; கமல் வருத்தம்

சென்னை:

ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் டிரைலரில், ரஜினி பற்றிய காமெடிக்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்ட நிலையில், அதில் ரஜினி பற்றிய காமெடி காட்சிக்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மேலும் ரஜினி ரசிகர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். ரசிகர்கள் உருவாக்கிய ‘கோமாளியை புறக்கணியுங்கள்’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று பிரபலமானது.

இந்நிலையில், ‘கோமாளி’ படத்தின் டிரைலரை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இது என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை எனக்கூறி வருத்தம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கிடையே தற்போது ‘கோமாளி’ படத்திலிருந்து இந்த காட்சி நீக்கப்படும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்