தமிழக அரசியலில் வெற்றிடம் உண்மை

தமிழக அரசியலில் வெற்றிடம் உண்மை

சென்னை:

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசஜ் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ரஜினி அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என அவர் தெரிவித்தார். இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் ரஜினிகாந்ததை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் கமல்ஹாசன், தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருப்பதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து கட்சியினருடன் கலந்தாலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்