பிக்பாஸிலிருது விலகுகிறாரா கமல்?

  • In Cinema
  • August 29, 2019
  • 205 Views
பிக்பாஸிலிருது விலகுகிறாரா கமல்?

சென்னை:

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகப்போவதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்பவர் கமல்ஹாசன். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அதிகம். ஆனால், கடந்த சீசன்களை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இதன் காரணமாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சீசனை மட்டும் தொகுத்து வழங்கிவிட்டு கமல் வெளியேறப்போவதாக இணையதளங்களில் செய்தி பரவி வருகிறது.

மேலும், அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகளால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல, சீசன் 3 ஆரம்பிப்பதற்கு முன், இதேபோல் செய்தி வெளியாகியது. ஆனால், கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்