கடைமடைக்கு நீர்; விவசாயிகள் கோரிக்கை

கடைமடைக்கு நீர்; விவசாயிகள் கோரிக்கை

ஓசூர்:

கெலவரப்பள்ளி அணையின் நீர் ஒருமாதமாக கடைமடை பகுதிக்கு செல்லாததால் காய்ந்துவரும் நெற்பயிரை காக்க உடனடியாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் ஆண்டுதோறும் இரண்டு போக பாசனங்களுக்காக நீர் திறந்து விடப்படுவதால், ஆண்டிற்கு இரண்டுமுறை 8000 ஏக்கர்கள் பாசனம் பெற்று வருகின்றன.

கர்நாடக பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு ஆற்றோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற கால்வாய் செல்லும் கடைமடை பகுதிகளுக்கு நீர் பாய்ந்து ஒருமாதமாகி உள்ள சம்பவம் விவசாயிகளை கவலையட செய்துள்ளது.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பேரண்டப்பள்ளி, அட்டகுறிக்கி உள்ளிட்ட கிராமங்களை கடந்து இறுதியாக நல்லகாணக்கொத்தப்பள்ளி, குண்டுகுறுக்கி ஆகிய கிராமங்களில் பாசனத்திற்காக பாய்ந்து நிறைவு பெறும்.

கெலவரப்பள்ளி அணையின் நீர் செல்லும் கால்வாய் கதிரேப்பள்ளி என்னுமிடத்தில் உடைப்பு ஏற்ப்பட்டு விட்டதாக இதுவரை ஒருமாதத்தை நெருங்கி உள்ளநிலையில், நல்லகாணக்கொத்தப்பள்ளி கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெயிலில் காய்ந்து வருகின்றன.

இதுக்குறித்து பேசிய கிராம விவசாயிகள்: ஒருமாத காலமாக நெற்பயிற்கள் காய்ந்து வருகின்றன, நெற்கதிர் முளைக்கும் இந்த சமயத்தில் பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் கால்வாய் உடைப்புக்களை சரிசெய்து நீர் திறந்துவிடவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்