திருவள்ளுவரை அடுத்து எம்.ஜி.ஆர்.க்கு காவி சட்டை!

திருவள்ளுவரை அடுத்து எம்.ஜி.ஆர்.க்கு காவி சட்டை!

திருவள்ளுவரை அடுத்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு காவி நிற சட்டை அணிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் பதிவிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து கடந்த கடந்த மாதம் திருவள்ளுவர் தினத்தன்று ட்வீட் செய்திருந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காவி நிற உடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, நெற்றியில் விபூதி தரித்திருந்த திருவள்ளுவரின் புகைப்படத்தைப் பதிவிட்டார். அதற்கு தமிழக அரசு வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிடுங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தனது பதிவை மாற்றி காவி உடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில் உள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையின் சட்டை காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

வழக்கமாக எம்.ஜி.ஆர். சிலையில் வெள்ளை சட்டையே அணிந்திருப்பார். தற்போது அது காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி; தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகின்றனர் – இல. கணேசன்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்