விடுதலைப்புலிகள் மீதான தடை: உறுதி செய்ய நீதிபதிகள் குழு..!

விடுதலைப்புலிகள் மீதான தடை: உறுதி செய்ய நீதிபதிகள் குழு..!

புதுடெல்லி:

ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின், கடந்த 1991ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை செய்யப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு முறையும் தடை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தமிழீழம் அமைப்பதற்காக முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, யுஏபிஏ எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், வரும் 2020ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான தடையை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தடை சரியா என்பதை உறுதி செய்ய நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையிலான குழுவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பெண் நீதிபதியான சங்கீத சிங்ரா, டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்