புல்லட் ரயில் மூக்கிற்கு இவ்வளவு செலவா..? மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் சோதனை வெற்றி..!!

புல்லட் ரயில் மூக்கிற்கு இவ்வளவு செலவா..? மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் சோதனை வெற்றி..!!

டோக்கியோ:
அதிநவீன தொழில்நுட்படத்துடன் கூடிய மணிக்கு 320 கி.மீ. செல்லக்கூடிய புல்லட் ரயிலை ஜப்பான் வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஷின்கென்சன் புல்லட் ரயிலை ஜப்பானின் கிழக்கு ரயில்வே தயாரித்து முடித்துள்ளது. இந்த புல்லட் ரயில் மூக்கு பகுதிக்கு மட்டுமே 91 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 640 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இந்த அதிநவீன ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயிலை ஜப்பானின் செண்டாயிலிருந்து மொரியோகா வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

இது 2030 -2031ம் ஆண்டில் மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சேவைக்கு விடப்படும், ரயில் சேவைகளை முன்கூட்டியே தொடங்க பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ஜப்பான் கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்