காஷ்மீரில் வெடிபொருட்களுடன் லாரி பிடிபட்டது

காஷ்மீரில் வெடிபொருட்களுடன் லாரி பிடிபட்டது

காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த 370 வது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் கூறியிருந்தாலும், பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுடன் மோதல் போக்கை கடை பிடித்து வருகிறது.

மேலும், இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவதற்கு தயாராக, சுமார் 280 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் உள்ளனர் என்று உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதற்கிடையில் இன்று, பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தது.

இதேபோன்று காஷ்மீர், கத்வா பகுதியில் நடந்த சோதனையில், சந்தேகப்படும் படியாக வந்த லாரியை பிடித்து பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

அந்த லாரியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததை தொடர்ந்து ராணுவத்தினர் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரையும் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்