ஜம்மு காஷ்மீரில் இணைதளம்; ஒரு வாரத்தில் முடிவு

ஜம்மு காஷ்மீரில் இணைதளம்; ஒரு வாரத்தில் முடிவு

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவை முடக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 5ம்ம தேதி முதல் இணைதள சேவையை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த நவம்பர் 27ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இதனையடுத்து, இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இணையதள சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அரசு உத்தரவுகளை இணையதளத்தில் வெளியிடுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இணையதளம் சேவை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்