ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிப்பு; ஜனாதிபதி ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிப்பு; ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370ஐ நீக்குவதற்கான அறிவிப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாறுகிறது. லடாக் பகுதி மட்டும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாறுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்யும் அறிவிப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்