ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் வழிபாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், மத வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த ஐஎஸ்ஐ முக்கிய நோக்கம் என கூறப்படுவதால், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்