அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; முன்னேற்பாடுகள் தீவிரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; முன்னேற்பாடுகள் தீவிரம்

மதுரை:

அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டுப்போட்டி மதுரை மாவட்டத்தில் தான் போட்டி சூடுபிடிகக்கும்.

தைப்பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும் அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதாவது, ஜனவரி 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் வரிசையாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் உலக புகழ்பெற்றதாகும். இதனால், வெளிமாநிலத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்த போட்டியை காண வருவார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காளைகள் சேகரிக்கும் மையம், வாடிவாசல் பகுதி, பார்வையாளர்கள் மாடம், காளைகள் வெளியேறும் பகுதியில் தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் வினய் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்