‘அயர்ன் மேன் சூட்’ உருவாக்கி அசத்தல்

‘அயர்ன் மேன் சூட்’ உருவாக்கி அசத்தல்

வாரணாசி:

வாரணாசி தனியார் பல்கலை., ஊழியர் ஒருவர் ராணுவத்தினருக்கு உதவும் வகையில் ‘அயர்ன் மேன் சூட்’ ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள அசோகா இன்ஸ்டிடியூட் ஆட் டெக்னாலஜி அன்டு மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகத்தில் ஷியாம் சவுராசியா பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளை சந்திக்க ஏதுவாக அவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்பியுள்ளார். அதன் அடிப்படையில், ‘அயர்ன் மேன் சூட்’ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஷியாம் கூறுகையில், ‘‘இது இந்திய இராணுவ வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மற்றும் எதிரிகளுடனான மோதலின்போது அவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு உலோக கவசம். தற்போது, ​​இது ஒரு முன்மாதிரி மட்டுமே; ஆனால் இது போரின் போது வீரர்களுக்கு பெரிதும் உதவக்கூடும்’’ என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘நாங்கள் கியர்ஸ் மற்றும் மோட்டார்கள் பயன்படுத்தினோம். இது ஒரு மொபைல் இணைப்பையும் கொண்டுள்ளது. இதனால் அதை தொலைதூரத்தில் பயன்படுத்தலாம். இது சென்சார்களைக் கொண்டுள்ளதால், பின்னால் இருந்து தாக்கப்படும்போது அவர்களுக்கு உதவும்’’ எனவும் அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்