பிரபல நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி

  • In Cinema
  • April 29, 2020
  • 136 Views
பிரபல நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்:  சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53.

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பெருங்குடல் தொற்று காரணமாக அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக கூறிப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இர்ஃபான் கான். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இர்ஃபான் கான் உயிரிழந்த தகவலை இயக்குநர் ஷுஜித் சிர்கார் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

இர்ஃபான் கான் மரண செய்தியை கேட்டு திரைதுறையினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்