ஜம்முவில் இணையதள சேவை மீண்டும் துவக்கம்

ஜம்முவில் இணையதள சேவை மீண்டும் துவக்கம்

ஸ்ரீநகர்:

ஜம்முவில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவையை மீண்டும் வழங்கியுள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது. இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகளை முடக்கிவைத்திருந்தது.

இதை எதிர்த்து தாக்கலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இணையதள சேவை அடிப்படை உரிமை என்பதால் அதை புனரமைப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ஜம்முவில் ஹோட்டல்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் சமூக வலைதளங்கள் மீதான தடை தொடர்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்