இங்கிலாந்து அமைச்சராக மருமகன்.. நாராயண மூர்த்தி மகிழ்ச்சி!

இங்கிலாந்து அமைச்சராக மருமகன்.. நாராயண மூர்த்தி மகிழ்ச்சி!

இங்கிலாந்து நாட்டின் அமைச்சரவையில் மருமகன் இடம்பெற்றிருப்பதற்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி – சுதா மூர்த்தி தம்பதியினரின் மகள் அக்ஷதாவின் கணவர் ரிஷி சுனக், கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு நார்த் யார்க்ஷரில் உள்ள ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றிபெற்று எம்பி ஆனவர். தற்போதைய இங்கிலாந்து பிரதமர் ஜான்சனின் அமைச்சரவையில் ரிஷி சுனக் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயணமூர்த்தி, கடுமையாக உழைத்து, நேர்மையாக செயலாற்றி, சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும், மக்களின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்