உலகக்கோப்பை கிரிக்கெட்: போட்டியிடாமலே 7ம் இடம்பிடித்த இந்திய அணி!

  • In Sports
  • June 4, 2019
  • 178 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: போட்டியிடாமலே 7ம் இடம்பிடித்த இந்திய அணி!

லண்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 30ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டியில் பங்கேற்காத நிலையில் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் மேற்கிந்திய தீவு அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. எந்த போட்டியிலும் பங்கேற்காத இந்திய அணி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்யாத தென்னாப்பிரிக்கா 8-வது இடத்தில் உள்ளது. 9-வது இடத்தில் ஆப்கானிஸ்தானும், கடைசி இடத்தில் இலங்கை அணியும் உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்