மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவ.,3ல் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்நாட்டின் இண்டியாஸ்போரா என்ற அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சர்வேயின் முடிவில் 3ல் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது 66 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 28 சதவீத இந்தியர்கள் ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக பட்சமாக 1 லட்சத்து 60,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர்ஆனால், சென்ற சென்ற தேர்தலில் டிரம்ப் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமால ஹாரிஸ் துணை அதிபராக போட்டியிடுவது மற்றும் பிரதமர் மோடி, டிரம்ப் இணைந்த பேரணி வீடியோ இவை இரண்டும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்