ராணுவ அதிகாரிகள் பணி; மே 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்!

ராணுவ அதிகாரிகள் பணி; மே 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்!

இந்திய ராணுவத்தில், பிராந்திய ராணுவ அதிகாரிகள் பணிக்கு இம்மாதம் 26 முதல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

இந்திய ராணவத்தில் பிராந்திய ராணுவ அதிகாரிகள் பணிக்கு, இம்மாதம் 26ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணபிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் joinindianarmy.nic.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான வயது வரம்பு 18 முதல் 42 வயதும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்