ஜுனியர் உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா

  • In Sports
  • February 4, 2020
  • 205 Views
ஜுனியர் உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா

போட்செஃப்ஸ்ட்ரூம்:

ஜுனியர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்கு குறைவான ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கில் களமிறங்கியது. இதனைய டுத்து, இந்தியாவின் பந்து வீச்சில் 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத்தொடர்ந்து, 173 ரன்கள் இலக்காக இந்திய அணி பேட்ங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்வால் 113 பந்துகளில் 105 ரன்களும், சக்சேனா 99 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து 35.2 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி, 176 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்