பாக்., பயிற்சி; இந்திய கடற்படை கண்காணிப்பு

  • In General
  • September 26, 2019
  • 178 Views
பாக்., பயிற்சி; இந்திய கடற்படை கண்காணிப்பு

புதுடெல்லி:

வடக்கு அரேபிய கடலில் பாகிஸ்தான் மேற்கொண்ட ஒரு முக்கிய கடற்படைப் பயிற்சியைக் கண்காணிக்க சில போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் போர் விமானங்களை இந்தியா முன்னோக்கி நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கப்பற்படை சில நாட்களுக்கு பயிற்சியை மேற்கொள்ளவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தானை கண்காணிக்க ஏதுவாக இந்திய கப்பற்படை விரைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்து அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, ஒரு பெரிய தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவரும் நிலையில், பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படையின் ‘ரிபாட்’ எனப்படும் கூட்டுப்பயிற்சி வழக்கமானதாக இருந்தாலும், எந்நேரமும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மாறக்கூடும் என ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் கடற்படைப் பயிற்சியைக் கண்காணிக்க சில போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் போர் விமானங்களை இந்தியா முன்னோக்கி நிறுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்