எல்லையில் 10 ஆயிரம் வீரர்களை குவித்த சீன ராணுவம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல். எல்லையில் பதற்றம்

எல்லையில் 10 ஆயிரம் வீரர்களை குவித்த சீன ராணுவம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல். எல்லையில் பதற்றம்

கிழக்கு லடாக்கில் பாங்கோங் த்சோவின் தெற்கு கரைக்கு அருகில் 10 ஆயிரம் வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எல்லையை பிரச்சினையை பேச்சு வார்த்தை வாயிலாக தீர்த்துக் கொள்ள இந்தியா நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் கிழக்கு லடாக்கில் பாங்கோங் த்சோவின் தெற்கு கரை பகுதியில் அங்குள்ள நிலையை சீன ராணுவம் முயற்சி செய்ததை இந்திய வீரர்கள் முறியடித்து சில பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.சீனா,இந்திய ராணுவ வீரர்கள்
இந்த தோல்வி சீன ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக முதல் முறையாக எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய, சீன பாதுகாப்பு துறை அமைச்சர்கள் நேரடியாக சந்தித்து பேசினர். ஆனாலும் அந்த சந்திப்பு இரு நாடுகளும் தங்களது நிலையில் இருந்ததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல். இந்த சூழ்நிலையில், கிழக்கு லடாக்கில் பாங்கோங் த்சோவின் தெற்கு கரைக்கு அருகில் உள்ள மலை உச்சிகளில் 10 ஆயிரம் வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாக தகவல்.

பாதுகாப்பு பணியில் வீரர்கள்
மேலும் காலாப்படை வாகனங்கள் மற்றும் கனரக பீரங்கி வண்டிகளையும் சீன ராணுவம் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பாங்கோங் ஏரியின் தெற்கு கரையில் ஸ்பாங்கூர் கேப் மற்றும் சுஷுல் சப் செக்டாரில் உளள ரெச்சின் லா வரை பரவியிருக்கும் பிளாஷ் பாயிண்ட் பகுதியில் சீன ராணுவத்துக்கு இணையாக இந்திய ராணுவமும் பலத்தை அதிகரித்துள்ளது. கிழக்கு லடாக் செக்டாரில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்