பாதுகாப்புக்கவச உற்ப்பதி, இந்தியா இரண்டாமிடம்

பாதுகாப்புக்கவச உற்ப்பதி, இந்தியா இரண்டாமிடம்

பாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.’கொரோனா’ தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவர்கள் உட்பட மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பி.பி.இ. எனப்படும் பாதுகாப்புக்கவச உடைகள் அணிவது கட்டாயமாகியுள்ளது.ஜவுளித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பி.பி.இ. விலை அதிகரிப்பு மற்றும் இவற்றைத் தயாரிப்பதற்கான இறக்குமதி இயந்திரங்களைப் பெறுவதில் சிக்கல் போன்றவை நம் நாட்டிலேயே பி.பி.இ.க்களைத் தயாரிக்கும் உத்வேகத்தை அளித்தது. சவால்களை எதிர்கொண்டு தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக பி.பி.இ.க்கள் அதிகம் தயாரிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அதிக எண்ணிக்கையில் பி.பி.இ.தயாரிக்கும் அதே தருணம் தரத்திலும் எந்த வகையிலும் சமரசம் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருந்தது. தரம் சிறக்க பிரத்யேகச் சான்றளிப்பு கோடு முறை பின்பற்றப்படுகிறது. உற்பத்தியாளர் பெயர் உற்பத்தி தேதி பெறுபவர் பெயர் போன்றவை ஒவ்வொரு பி.பி.இ.யிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.தினமும் 2.06 லட்சம் பி.பி.இ.க்களைத் தயாரிக்கும் திறனை பெற்றுள்ளோம். சராசரியாக தற்போது ஒரு லட்சம் பி.பி.இ.க்கள் தயாராகி வருகின்றன. கடந்த ஜனவரியில் நம் நாடு 2.75 லட்சம் பி.பி.இ.க்களை இறக்குமதி செய்திருந்தது. தற்போது நாமே தயாரித்த 16 லட்சம் பி.பி.இ.க்கள் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்