இந்தியா, பாக். போட்டி.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் போகும்.. வெதர்மேனின் ஐடியா.!

இந்தியா, பாக். போட்டி.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் போகும்.. வெதர்மேனின் ஐடியா.!

இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற்றால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் போகும் என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக நாடுகளிடையே பெரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

இந்த போட்டியானது மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது மான்செஸ்டரில் மிகவும் பயங்கரமான மழை பெய்து வருகிறது.

இதனால் போட்டி நடைபெறாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி தமிழ்நாடு வெதர்மென் போஸ்ட் போட்டுள்ளதாவது: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதினால் மட்டும் அது தொடர்பான வானிலை அறிவிப்புகளை நான் வெளியிடுவது வழக்கம்.
இன்று நல்ல மழை பெய்து போட்டி தடைபடுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

நம்ம தமிழக மக்கள் சி.எஸ்.கே. மேட்ச் நடைபெற்றாலே மழையே போ, மழையை போ என்று சொல்வார்கள். ஆனால் இன்னைக்கு கண்டிப்பாக தண்ணீர் மிச்சம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

இன்றைய நாள் ஞாயிறு, அனேக பேர் குளிக்காமல் சோபாவில் உட்காந்திருப்பார்கள். அதிலும் இன்று இந்தியா போட்டியை பார்ப்பதற்காகவே சோபால குளிக்காம உட்கார்ந்து இருப்பது சுகமேதான்.

அதே போன்று நாம் சோபாவை விட்டு ஒரு அடி எடுத்து வைக்க மாட்டோம். அப்படி மாறி உட்கார்ந்தாவே இந்திய அணியில் விக்கெட் விழும்.

அதனால் இன்று போட்டி நடந்தால் அனேகமானவர்கள் குளிக்க மாட்டார்கள். இதனால் தண்ணீர் நிறைய தண்ணீர் மிச்சம் ஆகும்.

எனவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியை நடத்தி கண்டிப்பாக தண்ணீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்