8 ஆண்டில் சீனாவைவிட இந்தியா மேலே.. எதில் தெரியுமா.?

8 ஆண்டில் சீனாவைவிட இந்தியா மேலே.. எதில் தெரியுமா.?

இன்னும் 8 ஆண்டுகளில் சீன மக்கள் தொகையை விட இந்திய மக்கள்தொகை அதிகரித்து விடும் என்று ஐநா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தற்போது விளங்கி வருகிறது.
இங்கு தற்போது 141 கோடியே 98 லட்சத்து 857 ஆயிரத்து 45 பேர் உள்ளனர்.

இந்தியாவில் 136 கோடியே 82 லட்சத்து 19 ஆயிரத்து 637 பேர் உள்ளனர். வரும் 2027ம் ஆண்டில் சீன மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகமாகிவிடும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநா பொருளாதார மற்றும் சமூக விகாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டில் உலக மக்கள் தொகையின் எதிர்கால நிலவரம் என்பது தொடர்பான அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2050 ஆண்டில் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்துவிடும். இந்த தொகை வரும் 2100ம் ஆண்டில் 1,100 கோடியாக அதிரடியாக உயரும்.

இதன் ஒரு பகுதியாக அடுத்த 8 ஆண்டுகளில், அதாவது 2027ம் ஆண்டில் சீனாவை விட மக்கள் தொகையில் இந்தியா முன்னிலையில் இருக்கும். அதே நேரத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகளின் மக்கள் தொகை குறையும்.

கடந்த 2010 ஆண்டு முதல் 27 நாடுகளில் ஒரு சதவீதம் அளவுக்கு மக்கள் தொகை குறைந்து வருகிறது. இவ்வாறு மக்கள் தொகை குறைவதற்கு கர்ப்பம் தரிப்பது குறைவதே காரணம்.
இதில் மிக அதிக மக்கள் தொகையை இந்தியாவும், குறைந்த மக்கள் தொகையை அமெரிக்காவும் பெற்றிருக்கும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்