ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 224 ரன்களே எடுத்த இந்தியா!

  • In Sports
  • June 22, 2019
  • 170 Views
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 224 ரன்களே எடுத்த இந்தியா!

சவுத்தாம்டன்:

உலகக்கோப்பை கிரி«க்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கில் களமிறங்குகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்று மோதுகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.

இதில் 4வது ஓவரிலேயே ரோகித் ஷர்மா 10 பந்துகளுக்கு ஒரே ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுல் 15 ஓவரில் 30 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சானார். இதனைத்தொடர்ந்து விளையாடிய விஜய் சங்கர் 29 ரன்களிலும், கோலி அரை சதத்தை பூர்த்தி செய்து 67 ரன்களிலும் எடுத்து அவுட்டாகினர்.

தோனி 52 பந்துகளில் 28 ரன்களிலும், ஜாதவ் 52 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும் அவுட்டாகினர். இதனைத்தொடர்ந்து ஷமி ஒரு ரன்னிலேயே அவுட்டானார். குல்தீப் மற்றும் பும்ரா தலா ஒரு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களை பூர்த்தி செய்தது இந்திய அணி.

இந்நிலையில், 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை இந்திய அணி குவித்தது. ஆப்கானிஸ்தான் 225 ரன்களை இலக்காக தற்போது பேட்டிங்கில் ஈடுபட்டுவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்