பரமேஸ்வர் வீட்டில் ரெய்டு; ரூ.4.52 கோடி பறிமுதல்

பரமேஸ்வர் வீட்டில் ரெய்டு; ரூ.4.52 கோடி பறிமுதல்

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வர் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவருக்கு சொந்தமான 30 இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் நேற்று நடத்திய சோதனையில் சுமார் ரூ.4.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை இயக்குனரகம் தெரிவத்துள்ளது.

மேலும், பரமேஸ்வருக்கு சொந்தமான சித்தார்தா மருத்துவக்கல்லூரியில் இன்று வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்