டார்னியர் ரக போர் விமானம் கடற்படையில் இணைப்பு!

டார்னியர் ரக போர் விமானம் கடற்படையில் இணைப்பு!

சென்னை:

ஐஎன்ஏஎஸ் 313 டார்னியர் ரக போர் விமானத்தை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் கலந்துகொண்டு, ஐ.என்.ஏ.எஸ். 313 டார்னியர் ரக விமானத்தை கடற்படையில் இணைத்தார்.

ஏற்கெனவே ஐஎன்ஏஎஸ் 313 டார்னியர் ரக 4 விமானங்கள் இந்திய கடற்பனையில் உள்ள நிலையில், 5வதாக கிழக்கு பிராந்தியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த விமானம், வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விமானத்தில் அதிநவீன சென்சார் மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பயணம் செய்யமுடியும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்