பிரதமரை தவறாக கூறிய இம்ரான்கான்

  • In General
  • September 28, 2019
  • 217 Views
பிரதமரை தவறாக கூறிய இம்ரான்கான்

நியூயார்க்:

ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரை நிகழ்த்தியபோது, மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாகக் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநாவில் தனது முதல் உரையை நிகழ்த்தியபோது, அவரின் பேச்சின் பெரும் பகுதி இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது. தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பேசிய இம்ரான்கான், பிரதமர் மோடியை குடியரசுத்தலைவர் என்று தவறாக குறிப்பிடார்.

ஏற்கெனவே ஈரானில் நிகழ்த்திய உரையில், ஜெர்மனி – பிரான்ஸ் எல்லைப் பகுதிக்கு பதில், ஜெர்மனியும் ஜப்பான் எல்லை என தவறாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில், இந்தியாவின் பிரதமரை, குடியரசுத் தலைவர் மோடி எனக் கூறி இம்ரான்கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்