ஐஎம்ஏ மோசடி; சிபிஐ.,க்கு மாற்றம்

ஐஎம்ஏ மோசடி; சிபிஐ.,க்கு மாற்றம்

பெங்களூரு:

ஐஎம்ஏ மோசடி வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி கர்நாடக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஐஎம்ஏ நிறுவனத்தை தொடங்கிய முஹம்மது மன்சூர் கான், நடுத்த பிரிவு இஸ்லாமியர்களிடம் பணம், நகையை முதலீடாக பெற்று அதனை ரியல் எஸ்டேட், மருத்துவத்துறை, நகை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்தார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென இவர் தலைமறைவாகி வீடியோக்களை வெளியிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பானது.

இந்த வழக்கில் சம்பந்தபட்ட முக்கிய நபரான முகம்மது மன்சூர் கான், கடந்த ஜூலை 19ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவான ரோஷன் பெய்க் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐஎம்ஏ மோசடி வழக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்