முன்னாள் முதல்வர் மகளுக்கு வீட்டு காவல்

முன்னாள் முதல்வர் மகளுக்கு வீட்டு காவல்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியயின் மகள் இன்று ஸ்ரீநகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா கடந்த 5 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது தாயார் மெகபூபாவை தனது விருந்தினர் இல்லத்துக்கு மாற்றுமாறு அவரது மகள் இல்திஜா, ஸ்ரீநகர் துணை ஆணையருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பினார். மேலும், தனது தாயாருக்கு என்ன ஆனாலும் அதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் இல்திஜா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டுக்காவலில் உள்ள தனது தாயை சந்திக்க செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இல்திஜா முஃப்தி உடனடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்