ஹைட்ரோ கார்பன் திட்டம்: பேரவையில் காரசார விவாதம்!

ஹைட்ரோ கார்பன் திட்டம்: பேரவையில் காரசார விவாதம்!

சென்னை:

பேரவையில் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அதிமுகவும் திமுகவும் காரசார விவாதத்தில் ஈடுபட்டது.

பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக அனுமதி தரவில்லை எனவும் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளித்தது என தெரிவித்தார்.

துரைமுருகன் பேசும்போது, ஒரு திட்டம் வரும்போது ஆய்வுக்கு அனுமதியளிப்பதில் தவறில்லை என தெரிவித்தார்.

இந்த விவாதத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், நாங்கள் ஆய்வுக்கூட அனுமதி அளிக்கவில்லை எனவும், இந்த விஷயத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது என தெரிவித்தார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், நீங்கள் என்னதான் அனுமதி அளிக்கவில்லை என்று கூறினாலும், மத்திய அரசு எந்த வழியிலாவது திட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதிலில், நாங்கள் உறுதியாக உள்ளோம். விவசாயத்தை பாதிக்கும் திட்டத்திற்கு முதல்வர் நிச்சயம் அனுமதி அளிக்கமாட்டார் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்