தூத்துக்குடி துப்பாக்கிசூடு: வழக்கை முடித்துவைப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: வழக்கை முடித்துவைப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தகவல்!

சென்னை:

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி தூத்துக்கடியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜராஜன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.

அதில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை முடித்து வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்