வீடுகள் கட்டித்தருவதாக மோசடி

வீடுகள் கட்டித்தருவதாக மோசடி

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் வீடுகளை கட்டித்தருவாக ரூ.20 கோடி மோசடி செய்து தலைமறைவானதால், பாதிக்கப்பட்டோர் டிஎஸ்பியிடன் புகாரளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியில் ஆர்பி குவாலிட்டி பில்டர்ஸ் என்கிற கட்டுமாண பணி அலுவலகத்தை 12 ஆண்டுகளாக நடந்தி வந்தவர் ராஜேஷ் கண்ணா(40).

இவர் ஓசூர் லட்சுமிநரசிம்ம நகரில் குடும்பத்துடன் குடியிருந்து, இதுவரை எண்ணற்ற கட்டிடங்களை கட்டிக்கொடுத்து பலருக்கும் அறிமுகமானவராக இருந்துள்ளார், கடந்த சிலதினங்களாக பலரிடம் கட்டுமான பணிகளை செய்து தருவதாக 20 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை வழக்கம் போல் பணி தொடங்குவதற்கு முன் பெறப்படுவது போல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பணம் பெற்றவர்களிடம் வீட்டு கட்டுமான பணிகளை 25% முதல் 50% வரை மட்டுமே முடித்து காலம் தாழ்த்தி வந்ததாகவும் தீபாவளிக்கு முன்னதாக வரை தொடர்பில் இருந்த ராஜேஷ் கண்ணா.

கடந்த 10 நாட்களாக வீட்டைகாலி செய்தும், தன்னுடைய பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழ்களுடன் ஊரை விட்டு காலியானதை அறிந்த பணம் கொடுத்தோர் பதறியடித்து ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளரினம் புகார் அளித்துள்ளனர்.

பணம் கொடுத்து கட்டிட பணிகள் முழுமை பெறவில்லை என 40 பேர்வரை புகார் அளித்திருப்பதால் 20கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி இருப்பது பலருக்கும் தெரியாதென்றும் அவர்களும் புகாரளித்தால் மதிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

புகாரை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி விசாரணை மேற்க்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்